5 மாத சம்பளம் பாக்கி! பயணிகளுடன் நடுவழியில் விமானத்தை நிறுத்திய விமானி; அதிர்ச்சியில் பயணிகள்!
December 21, 2025

மெக்சிகோ சிட்டி விமான நிலையத்தில் நிலுவை சம்பளம் வழங்காததைக் கண்டித்து விமானி ஒருவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த ஐந்து மாதங்களாக ஊதியம் மற்றும் பயணப்படி வழங்கப்படாததால், கன்குன் செல்ல வேண்டிய விமானத்தை இயக்க அவர் மறுத்துவிட்டார். மூன்று குழந்தைகளின் தந்தையான தனக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காதவரை விமானத்தை இயக்கப்போவதில்லை என அவர் பயணிகளிடம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட விமானி கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.