என் மரணத்திற்காகக் காத்திருக்கும் கூட்டம்? ராமதாஸின் அதிரவைக்கும் வாக்குமூலம்!

என் மரணத்திற்காகக் காத்திருக்கும் கூட்டம்? ராமதாஸின் அதிரவைக்கும் வாக்குமூலம்!

பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனது குடும்பத்தைச் சிதைத்த பெருமை அன்புமணியின் மனைவி சவுமியாவையே சாரும் என்று குறிப்பிட்டுள்ள ராமதாஸ், அன்புமணி பொய் பேசுவதில் வல்லவர் என்றும், கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றவும், தொண்டர்களைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்கவும் அவர் திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தாம் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கடினமான காலக்கட்டத்தில், தனது மகன், மருமகள் மற்றும் பேத்திகள் யாரும் வந்து நலம் விசாரிக்கவில்லை என்று ராமதாஸ் வேதனையுடன் தெரிவித்தார். மேலும், அன்புமணி தன்னை வழிநடத்துவதற்கு மாறாக, கட்சிக்குள்ளேயே அதிகாரப் போட்டியை உருவாக்கி, தனது பிம்பத்தை சிதைக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ராமதாஸின் பேரனான முகுந்தனும், பணப் பேராசையாலேயே கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், தான் கொள்கை ரீதியாகத் தனது தாத்தாவின் பக்கமே நிற்பதாகவும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *