2026-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் அமெரிக்காவின் அதிரடி தகவல்

2026-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் அமெரிக்காவின் அதிரடி தகவல்

அமெரிக்காவின் ‘கவுன்சில் ஆன் ஃபாரீன் ரிலேஷன்ஸ்’ (CFR) அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், 2026-ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் அதிகரித்து வரும் பயங்கரவாதச் செயல்களே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமையும் என அந்த அறிக்கை கூறுகிறது. 2025-ல் நடந்த ‘ஆபரேஷன் சிந்துார்’ மற்றும் தொடர்ச்சியான ட்ரோன் ஊடுருவல்களைத் தொடர்ந்து, இந்தியா 79,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை வாங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மோதல் இந்தியாவுடன் மட்டுமல்லாமல், எல்லைப் பிரச்சனைகளால் ஆப்கானிஸ்தானுடனும் பாகிஸ்தானுக்கு போர் ஏற்படும் சூழல் நிலவுகிறது. பாகிஸ்தான் தனது ராணுவப் பலத்தை அதிகரிக்க சீனா மற்றும் துருக்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 2026-ஆம் ஆண்டில் எல்லையில் நிலவும் இந்த பதற்றமான சூழல், தெற்காசியாவின் அரசியல் வரைபடத்தையே மாற்றியமைக்கக்கூடும் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *