தலைமுடி நேராக்க சென்ற இளம்பெண்ணுக்கு சிறுநீரக செயலிழப்பு அதிர்ச்சியூட்டும் மருத்துவ அறிக்கை

தலைமுடி நேராக்க சென்ற இளம்பெண்ணுக்கு சிறுநீரக செயலிழப்பு அதிர்ச்சியூட்டும் மருத்துவ அறிக்கை

அழகிற்காக செய்யப்படும் ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் சிகிச்சை ஒரு 17 வயது சிறுமியின் சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலில் உள்ள ஷாரே செடெக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு, தலைமுடி சிகிச்சைக்குப் பிறகு கடுமையான வாந்தி மற்றும் தலைவலி ஏற்பட்டது. பரிசோதனையில் அவரது சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதற்கு முன்பும் இதே போன்ற பாதிப்புகள் பல பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் ‘கிளையாக்சிலிக் அமிலம்’ இரத்தத்தில் கலந்து சிறுநீரகத்தை பாதிக்கிறது. இந்த ஆபத்தைத் தவிர்க்க ரசாயனங்கள் நேரடியாகத் தலையில் படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடனும், சரியான வழிகாட்டுதல்களைப் பின்பற்றியும் செயல்படுவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *