20 பிகா நிலத்தில் விவசாயி கட்டிய பிரம்மாண்ட அரண்மனை வைரலாகும் வீடியோவால் மிரண்டு போன மக்கள்
December 17, 2025

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், 20 பிகா நிலத்தில் கட்டப்பட்ட ஒரு விவசாயியின் பிரம்மாண்ட வீடு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த மிகப்பெரிய மாளிகையில் 14 சகோதரர்களின் வாரிசுகள் உட்பட மொத்தம் 35 பேர் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த வீட்டில் விலையுயர்ந்த வாகனங்கள் முதல் குதிரைகள் வரை அனைத்தும் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனிக்குடித்தனங்கள் பெருகிவரும் இந்த காலத்தில், ஒரு விவசாயக் குடும்பம் இவ்வளவு ஒற்றுமையாகவும் வசதியாகவும் வாழ்வது பலரை கவர்ந்துள்ளது. அந்த வீட்டின் பிரம்மாண்டத்தையும், அக்குடும்பத்தின் பாரம்பரியத்தையும் விளக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கிராமப்புற வாழ்வியலின் ஒரு செழுமையான அடையாளமாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது.