ஹோட்டலில் இருந்து செக்-அவுட் செய்கிறீர்களா? இந்த பொருட்களை எடுத்தால் அபராதம் நிச்சயம்

சுற்றுலா செல்லும் போது ஹோட்டல் அறைகளில் தங்குவது வழக்கம். ஆனால், அங்கிருக்கும் சில பொருட்களை எடுத்துச் செல்வது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். பொதுவாக, அறையில் வைக்கப்பட்டுள்ள சிறிய ஷாம்பு பாட்டில்கள், சோப்பு, டீ மற்றும் காபி தூள் பாக்கெட்டுகள், டிஸ்போசபிள் ஸ்லிப்பர்கள் மற்றும் நோட்பேட்கள் ஆகியவற்றை நீங்கள் தாராளமாக எடுத்துச் செல்லலாம். இவை விருந்தினர்களுக்காகவே பிரத்யேகமாக வழங்கப்படுபவை.
ஆனால், ஹோட்டல் துண்டுகள், பெட்ஷீட்கள், தலையணைகள் அல்லது குளியலறை அங்கிகளை (Bathrobe) எடுப்பது சட்டப்படி தவறாகும். இவற்றை எடுத்தால் உங்கள் பில்லில் கூடுதல் தொகை அபராதமாக விதிக்கப்படும். அதேபோல், அறையில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டுள்ள ஓவியங்கள், காபி மக்குகள் அல்லது ஒயின் கிளாஸ்களை எடுக்கக் கூடாது. தெரியாமல் கூட இத்தகைய பொருட்களை எடுத்துச் செல்வது உங்களை அந்த ஹோட்டல் நிர்வாகத்தின் ‘பிளாக் லிஸ்ட்டில்’ சேர்க்கக்கூடும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.