ஹோட்டல் அறையில் நீங்கள் பயன்படுத்தும் இந்த பொருட்கள் ஒருபோதும் துவைக்கப்படுவதில்லை முன்னாள் ஊழியர் வெளியிட்ட பகீர் உண்மை

ஹோட்டல் அறைகளின் பளபளப்பான தோற்றத்தைக் கண்டு நாம் ஏமாந்து விடுகிறோம், ஆனால் அதன் பின்னால் இருக்கும் அழுக்கு அதிர்ச்சியளிக்கிறது. சமீபத்தில் ஒரு முன்னாள் ஹோட்டல் ஊழியர் ரெடிட் தளத்தில் பகிரும்போது, அறையில் இருக்கும் அலங்கார மெத்த விரிப்புகள் மற்றும் போர்வைகள் முறையாகத் துவைக்கப்படுவதில்லை என்று கூறியுள்ளார். இவை மாதக்கணக்கில் பல விருந்தினர்களால் பயன்படுத்தப்பட்ட பிறகும் அப்படியே வைக்கப்படுவதாக அவர் எச்சரித்துள்ளார்.
ஹோட்டல் துறையில் ‘சாஃப்ட் குட்ஸ்’ என்று அழைக்கப்படும் இந்த அலங்காரப் பொருட்கள் நேரடியாக உடலோடு தொடர்பு கொள்ளாதவை என்பதால் அவற்றை தினமும் துவைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பெட்ஷீட்கள் மற்றும் டவல்கள் மாற்றப்பட வேண்டும் என்ற விதி இருந்தாலும், நேரமின்மை காரணமாகப் பல ஊழியர்கள் பழையவற்றையே பயன்படுத்துகின்றனர். எனவே ஹோட்டல் அறைகளில் தங்குபவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம்.