விமான பயணிகளுக்கு ஷாக் கொடுக்கும் இண்டிகோ இனி தனியாக வசூலிக்கப்படும் எரிபொருள் கட்டணம்
March 13, 2026

மேற்கு ஆசிய நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் மற்றும் வான்வெளி சிக்கல்கள் காரணமாக இந்திய விமான நிறுவனங்கள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. சர்வதேச வழித்தடங்களில் இயக்கச் செலவு அதிகரித்துள்ளதால், எரிபொருள் மீதான வரியைக் குறைக்க இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த இழப்பை ஈடுகட்ட, இண்டிகோ நிறுவனம் நாளை முதல் பயணிகளிடம் கூடுதல் எரிபொருள் கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்துள்ளது. பயண தூரத்தைப் பொறுத்து 425 ரூபாய் முதல் 2,300 ரூபாய் வரை இந்த கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் விலையேற்றம் விமான பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.