நெல்லை அம்பாசமுத்திரத்தில் பயங்கரம் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியின் தலையை துண்டித்த கணவன்

நெல்லை அம்பாசமுத்திரத்தில் பயங்கரம் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியின் தலையை துண்டித்த கணவன்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தால் மனைவியின் தலையை துண்டித்துக் கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். கொத்தனார் வேலை பார்க்கும் அஜித், தனது மனைவி சுதா பக்கத்து வீட்டு நபருடன் பழகி வந்ததைக் கண்டித்துள்ளார். பலமுறை எச்சரித்தும் சுதா தனது பழக்கத்தைக் கைவிடாததால் ஆத்திரமடைந்த அஜித், மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியின் தலையை துண்டாக வெட்டி எடுத்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்தக் காயங்களுடன் இருந்த அஜித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எச்சரித்தும் கேட்காததால் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இந்த கொடூரக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *