வாரம் ஏழு வெவ்வேறு துணைகள் ஜென் ஜி மத்தியில் வைரலாகும் ரோஸ்டர் டேட்டிங் கலாச்சாரம்

இன்றைய ஜென் ஜி தலைமுறையினர் மத்தியில் ‘ரோஸ்டர் டேட்டிங்’ என்ற புதிய கலாச்சாரம் வேகமாகப் பரவி வருகிறது. இதில் ஒருவருடன் மட்டும் உறவில் இருக்காமல் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நபருடன் நேரம் செலவிடுவது வழக்கமாக உள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் இந்த மாற்றத்தின் நோக்கம் தங்களுக்குப் பொருத்தமான சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதே ஆகும். எவ்வித கட்டாயமும் இன்றி பலரைச் சந்தித்துப் பழக இந்த முறை வழிவகுக்கிறது.
பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூக மாற்றங்களே இந்த நவீன டேட்டிங் முறைக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. தவறான நபருடன் இணைந்து வாழ்க்கையை வீணாக்குவதை விட பலரைச் சந்தித்து சரியானவரைத் தேர்வு செய்வது நல்லது என இளைஞர்கள் கருதுகின்றனர். நம்பிக்கை குறைவு மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதன் விளைவாகவே இந்த ரோஸ்டர் டேட்டிங் முறை தற்போது பிரபலமடைந்து வருகிறது.