இந்தோனேசியாவில் அரங்கேறிய கொடூரம் திருமணத்திற்கு முன் உறவு கொண்ட ஜோடிக்கு 140 கசையடிகள்

இந்தோனேசியாவில் அரங்கேறிய கொடூரம் திருமணத்திற்கு முன் உறவு கொண்ட ஜோடிக்கு 140 கசையடிகள்

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் ஷரியா சட்டத்தை மீறியதற்காக திருமணமாகாத ஜோடி ஒன்றுக்கு பொதுவெளியில் 140 கசையடிகள் வழங்கப்பட்டன. திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொண்டது மற்றும் மது அருந்தியதே இதற்குக் காரணம். தண்டனையின் போது கசையடியைத் தாங்க முடியாமல் அந்தப் பெண் மயங்கி விழுந்தது அங்கிருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சுமத்ரா தீவில் உள்ள ஆச்சே மாகாணத்தில் மட்டுமே இத்தகைய கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் அமலில் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மிகக் கடுமையான தண்டனைகளில் இதுவும் ஒன்று என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினமே ஷரியா காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் உட்பட மேலும் சிலருக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளை மீறியதற்காக கசையடி தண்டனை வழங்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *