கூகுள் டிரான்ஸ்லேட்டிற்கு சவால் விடும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு
February 1, 2026

சாம் ஆல்ட்மேனின் ஓபன்ஏஐ நிறுவனம் கூகுள் டிரான்ஸ்லேட்டிற்கு போட்டியாக சாட்ஜிபிடி டிரான்ஸ்லேட் எனும் புதிய சேவையை அறிவித்துள்ளது. சுமார் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் துல்லியமாக மொழிபெயர்க்கும் இந்த கருவி சொற்களை மட்டும் மாற்றாமல் கலாச்சார நுணுக்கங்களையும் கருத்தில் கொண்டு செயல்படும். இதன் மூலம் மொழிபெயர்ப்பு துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த ஓபன்ஏஐ திட்டமிட்டுள்ளது.
தற்போது கூகுள் 249 மொழிகளில் சேவையை வழங்கினாலும் சாட்ஜிபிடியின் துல்லியம் அதற்கு பெரும் சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது. ஏஐ தொழில்நுட்ப போட்டியில் கூகுள் தற்காலிகமாக முன்னிலையில் இருக்கலாம் ஆனால் தங்களது ஆராய்ச்சி குழு சூப்பர் இன்டெலிஜென்ஸ் நோக்கி நகர்வதாக ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். இந்த புதிய அறிவிப்பு தொழில்நுட்ப உலகில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.