வளைகுடா நாடுகளில் மோதல் போக்கு, சவூதி அரேபியா மற்றும் யூஏஇ இடையே போர் பதற்றம்

வளைகுடா நாடுகளில் மோதல் போக்கு, சவூதி அரேபியா மற்றும் யூஏஇ இடையே போர் பதற்றம்

ஏமனில் உள்ள முக்கல்லா துறைமுகம் மீது சவூதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) இருந்து வந்த கப்பல்கள் மூலம் பிரிவினைவாத அமைப்பான எஸ்டிசி-க்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டதாக சவூதி குற்றம் சாட்டியுள்ளது. பல ஆண்டுகளாக கூட்டாளிகளாக இருந்த இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் இப்போது பகிரங்கமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏமன் உள்நாட்டுப் போரில் இந்த விரிசல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

ராணுவ பலத்தைப் பொறுத்தவரை, சவூதி அரேபியா 2025-ஆம் ஆண்டின் உலகளாவிய தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ளது. சவூதியிடம் மிகப்பெரிய தரைப்படை மற்றும் விமானப்படை உள்ளது. அதேசமயம், ஐக்கிய அரபு அமீரகம் 50-வது இடத்தில் இருந்தாலும், நவீன தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன போர் விமானங்களைக் கொண்டு வலுவாக உள்ளது. சவூதியின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள யூஏஇ, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தியுள்ளது. இந்த அதிகாரப் போட்டி வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு புதிய சவாலாக மாறியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *