மும்பையில் அதிசயம் 5000 கிமீ தொலைவில் இருந்து ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்

மும்பையில் அதிசயம் 5000 கிமீ தொலைவில் இருந்து ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்

மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் 5,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷாங்காய் நகரிலிருந்து ரோபோட்டிக் தொழில்நுட்பம் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. டாக்டர் டி.பி. யுவராஜா சீனாவிலிருந்து தௌமாய் ரிமோட் ரோபோட்டிக் சிஸ்டம் மூலம் இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தார். இது இந்தியாவின் முதல் எல்லை கடந்த தொலைதூர ரோபோட்டிக் அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதியுடன் நடைபெற்ற இந்த முயற்சி மருத்துவத்துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றமாகும். மும்பை மற்றும் ஷாங்காய் நாடுகளின் மருத்துவக் குழுவினரின் கூட்டு முயற்சியால் இந்த சாதனை சாத்தியமானது என்று மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சந்தோஷ் ஷெட்டி தெரிவித்துள்ளார். இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் புவியியல் எல்லைகளைக் கடந்து உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையை அனைவருக்கும் கொண்டு சேர்க்க உதவும் என

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *