யேமனில் சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே மோதலை உருவாக்கும் எஸ்டிசி பிரிவினைவாத அமைப்பு யார்

யேமனில் சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே மோதலை உருவாக்கும் எஸ்டிசி பிரிவினைவாத அமைப்பு யார்

யேமனின் முக்கல்லா துறைமுக நகரில் சவுதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதல் மத்திய கிழக்கின் அரசியல் சிக்கலை மீண்டும் அதிகரித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவு பெற்ற தெற்கு இடைக்கால கவுன்சில் எனப்படும் எஸ்டிசி அமைப்புக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகக் கூறி சவுதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 2017-இல் தொடங்கப்பட்ட எஸ்டிசி அமைப்பு தென் யேமனை தனி நாடாக்கப் போராடி வருகிறது. எரிவாயு மற்றும் எண்ணெய் வளம் நிறைந்த பகுதிகளைக் கைப்பற்றுவதில் இந்த அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.

யேமன் நாட்டை துண்டாடக் கூடாது என்பதில் சவுதி அரேபியா உறுதியாக உள்ளது. ஆனால் செங்கடல் மற்றும் அரபிக் கடல் பாதைகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஐக்கிய அரபு அமீரகம் எஸ்டிசி அமைப்பைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. உலக எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இப்பகுதியில் நிலவும் இந்த மோதல் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எஸ்டிசி அமைப்பின் வளர்ச்சியைத் தடுக்க சவுதி எடுக்கும் முயற்சிகள் வளைகுடா நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *