வடவள்ளி துணை சுகாதார நிலைய ஆக்கிரமிப்பு புகாரில் சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை
March 10, 2026

வடவள்ளி துணை சுகாதார நிலையத்தை செவிலியரின் குடும்பத்தினர் ஆக்கிரமித்து குடியிருப்பாகப் பயன்படுத்துவதாக எழுந்த புகாரையடுத்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். ஆய்வின்போது சிகிச்சைக்கான இடத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட செவிலியர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும், மாநகர சுகாதார அலுவலரிடம் விளக்கம் கேட்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இனி அந்த கட்டிடத்தின் இரண்டு அறைகள் சிகிச்சைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். குடியிருப்பு மற்றும் சிகிச்சை பிரிவுகளுக்கு இடையே தடுப்புச்சுவர் அமைத்து, தனி நுழைவாயில் ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.