கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டாத வரை பெட்ரோல் விலை உயராது

கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டாத வரை பெட்ரோல் விலை உயராது

ஈரான் மற்றும் இஸ்ரேல் போரினால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில், சர்வதேச சந்தையில் விலை 100 டாலரை எட்டாத வரை இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தற்காலிக இழப்புகளைத் தாங்கிக் கொள்ளுமாறு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இனி ஒரு சிலிண்டர் பெற்ற 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த முன்பதிவு செய்ய முடியும் என்ற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியிலான விநியோகத்தில் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *