மேற்காசியப் போர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன் என்று ராகுல் காந்தி ஆவேசம்
March 9, 2026

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கும் பிரதமர் மோடி, மக்களின் பிரச்னைகளை எதிர்கொள்ள பயந்து சபையை விட்டு ஓடிவிட்டதாக அவர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் குற்றம் சாட்டினார்.
பங்குச்சந்தை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற முக்கிய விவகாரங்களை அரசு தவிர்க்கிறது என்று ராகுல் காந்தி கூறினார். அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களால் இந்தியா சந்திக்கப்போகும் இழப்புகள் குறித்து விவாதிக்க வேண்டியது அவசியம் என்றும், மக்களின் நலனை விட பிரதமரின் தனிப்பட்ட நிலைப்பாட்டிற்கே பாஜக முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் சாடினார்.