மீண்டும் சிபிஐ வளையத்தில் விஜய்

மீண்டும் சிபிஐ வளையத்தில் விஜய்

கரூர் கூட்ட நெரிசல் விபத்து வழக்கு தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. நாளை அவர் நேரில் ஆஜராக உள்ள நிலையில், ஏற்கனவே அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 41 பேர் உயிரிழந்த இந்த துயர சம்பவம் குறித்து சிபிஐ தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த திடீர் அழைப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதற்கிடையே அவரது ‘ஜன நாயகன்’ படத்தின் தணிக்கை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அரசியல் கூட்டணி குறித்த பேச்சுகள் எழுந்துள்ள சூழலில், விஜய்க்கு விடுக்கப்பட்ட இந்த சம்மன் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *