மார்ச் முதல் பிஎப் பணத்தை யுபிஐ மூலம் எடுக்கலாம்

மார்ச் முதல் பிஎப் பணத்தை யுபிஐ மூலம் எடுக்கலாம்

கோடிக்கணக்கான இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2026 மார்ச் மாதத்திற்குள் வாடிக்கையாளர்கள் தங்கள் பிஎப் பணத்தை ஏடிஎம் அல்லது யுபிஐ மூலம் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம். தற்போதுள்ள கடினமான படிவ முறைகளை எளிதாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, 12 மாத கால பணியை முடித்தாலே சந்தாதாரர்கள் தங்கள் சேமிப்பில் 75 சதவீதத்தை உடனடியாகப் பெற முடியும். இது பணம் எடுப்பதில் ஏற்படும் தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்க உதவும். ஊழியர்கள் தங்களுக்குத் தேவையான நிதியை மிகவும் விரைவாகவும் வெளிப்படையாகவும் பெறுவதை இந்த புதிய கட்டமைப்பு உறுதி செய்யும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *