NPS புதிய விதிகள் 5 ஆண்டு லாக்-இன் ரத்து மற்றும் 80 சதவீத பணத்தை எடுக்க அனுமதி
December 17, 2025

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) அரசு சாரா சந்தாதாரர்களுக்கான விதிகளில் PFRDA முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. இனி 5 ஆண்டு கால லாக்-இன் முறை கிடையாது என்பதால் முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். புதிய விதிகளின்படி, மொத்த தொகையில் 80% வரை மொத்தமாகப் பெற்றுக்கொள்ள முடியும், மீதமுள்ள 20% மட்டுமே ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட வேண்டும்.
8 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு வைத்துள்ளவர்கள் எந்த நிபந்தனையுமின்றி முழுத்தொகையையும் எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலீட்டாளர்கள் 85 வயது வரை தங்கள் கணக்கை நீட்டிக்க முடியும். இந்த அதிரடி மாற்றங்கள் தனியார் துறை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் நிதி சுதந்திரத்தை அதிகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.