டெல்லியில் காற்று மாசு தீவிரம் 50 சதவீத ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவு
December 17, 2025

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனப் போக்குவரத்தைக் குறைத்து மாசுபாட்டைத் தடுக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத் தடை காரணமாகப் பாதிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. காற்றின் தரம் இன்னும் மோசமான நிலையில் இருப்பதால், மாசுபாட்டைக் குறைக்க கடும் கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தற்போது தலைநகரில் தொடர்கின்றன.