மத்திய கிழக்கு நாடுகளுடனான நட்புறவு இந்தியாவின் ஏற்றுமதி 950 பில்லியன் டாலரை எட்டும்

மத்திய கிழக்கு நாடுகளுடனான இந்தியாவின் நெருக்கமான உறவு மற்றும் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாக, வரும் 2027 நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி 950 பில்லியன் டாலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. ஓமன் மற்றும் பிரிட்டன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமையும். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சேவைத் துறைகளின் வலுவான செயல்பாட்டால் இந்தியப் பொருளாதாரம் புதிய உச்சத்தைத் தொட உள்ளது.
அமெரிக்காவின் இறக்குமதி வரி உயர்வு மற்றும் காலநிலை மாற்றக் கட்டுப்பாடுகள் சில சவால்களை ஏற்படுத்தினாலும், ஜவுளித்துறை 20 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் ஏற்றுமதி ஊக்கத்தொகை திட்டங்கள் மற்றும் புதிய சந்தைகளை கண்டறியும் முயற்சிகள், சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.