வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியிடம் அநாகரீகமாக நடந்த ஆசிரியர் கையும் களவுமாக சிக்கினார்
January 2, 2026

உத்தரபிரதேச மாநிலம் ஜாலான் மாவட்டத்தில் டியூஷன் எடுக்க வந்த 55 வயது ஆசிரியர் ரமேஷ் சந்திர நிரஞ்சன், தனது மாணவியிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அந்த ஆசிரியர் இழிவான செயலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி சத்தமிட்டதால் பயந்துபோன ஆசிரியர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
திங்கட்கிழமை மீண்டும் டியூஷன் எடுக்க வந்த ஆசிரியரை உள்ளூர் மக்கள் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். தப்பிக்க முயன்ற அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.