மத்திய கிழக்கில் போர் மேகங்கள் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி சந்தை பெரும் அதிர்ச்சியை சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 115 டாலராக உயர்ந்துள்ள நிலையில், ஹேர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ள இந்தியாவிற்கு இது மிகப்பெரிய பொருளாதார சவாலாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ள சூழலில், வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்காலிக தீர்வாக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அனுமதி கிடைத்துள்ள போதிலும், போர் நீடித்தால் பணவீக்கம் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *