விராட்டின் சாதனையை தகர்த்து உலகக்கோப்பை நாயகனான சஞ்சு சாம்சன் மனைவியின் பாசத்தில் நெகிழ்ச்சி

விராட்டின் சாதனையை தகர்த்து உலகக்கோப்பை நாயகனான சஞ்சு சாம்சன் மனைவியின் பாசத்தில் நெகிழ்ச்சி

2026 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் தொடர் நாயகன் சஞ்சு சாம்சன், தனது வெற்றியை மனைவி சாருலதாவுக்கு சமர்ப்பித்துள்ளார். இந்தத் தொடரில் 321 ரன்கள் குவித்து, விராட் கோலியின் சாதனையை முறியடித்த சஞ்சு, கடினமான காலங்களில் தனது மனைவியின் உறுதுணையை உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். திருமணத்திற்கு முன்பும் பின்பும் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

தொடர் முழுவதும் 24 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்த சஞ்சு, இறுதிப்போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக 89 ரன்கள் குவித்து அசத்தினார். “என் கனவுகளை உன்னுடையதாக மாற்றிக்கொண்டதற்கு நன்றி அன்பான பொண்டாட்டி” என அவர் பதிவிட்டுள்ளார். பல ஆண்டுகால காத்திருப்பிற்குப் பிறகு கிடைத்த இந்த மாபெரும் வெற்றியை சஞ்சு சாம்சன் தனது குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *