மஹாராஷ்டிராவில் ஓலா உபர் மற்றும் ராபிடோ பைக் டாக்ஸி சேவைகளுக்கு அதிரடி தடை

மஹாராஷ்டிராவில் ஓலா உபர் மற்றும் ராபிடோ பைக் டாக்ஸி சேவைகளுக்கு அதிரடி தடை

விதிமுறைகளை மீறி பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்தியதால் ஓலா, உபர் மற்றும் ராபிடோ நிறுவனங்களின் பைக் டாக்ஸி உரிமங்களை மகாராஷ்டிர அரசு ரத்து செய்துள்ளது. மின்சார வாகனங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்ற நிபந்தனையை மீறியதே இந்த அதிரடி முடிவுக்கு முக்கிய காரணமாகும்.

பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில், அடுத்த ஒரு மாதத்திற்குள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் நிரந்தர தடை விதிக்கப்படுவதோடு, விதிகளை மீறும் வாகன உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *