மதுரை மாநகராட்சியில் 200 கோடி வரி ஊழல் மற்றும் திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கூட்டணி அறிவித்துள்ள பிரம்மாண்ட போராட்டம்

மதுரை மாநகராட்சியில் 200 கோடி வரி ஊழல் மற்றும் திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கூட்டணி அறிவித்துள்ள பிரம்மாண்ட போராட்டம்

மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு தொடர்பாக திமுக அரசுக்கு எதிராக அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி வரும் மார்ச் 12-ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்ட போராட்டத்தை அறிவித்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகளின் ரகசிய குறியீடுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி வரி குறைப்பு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக சாடியுள்ளார்.

இந்த ஊழல் வழக்கில் மேயரின் கணவர் பொன் வசந்த் மற்றும் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து மாதங்களாக மாமன்ற கூட்டம் நடத்தப்படாததால் மக்கள் குறைகள் தீர்க்கப்படவில்லை என குற்றம் சாட்டிய செல்லூர் ராஜு, திமுக அரசு அதிகார பலத்தையும் பணத்தையும் கொண்டு மக்களை ஏமாற்றி வருவதாகவும் மக்கள் வரிப்பணம் சூறையாடப்படுவதை தடுத்து நிறுத்தவே இந்த போராட்டம் எனவும் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *