மக்கள் பணியில் மகத்தான 5 ஆண்டுகள், சாதனை மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்கள் பணியில் மகத்தான 5 ஆண்டுகள், சாதனை மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசின் ஐந்தாண்டு கால சாதனைகளை விளக்கும் ‘மக்கள் பணியில் மகத்தான 5 ஆண்டுகள் (2021-26)’ என்ற சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ‘தமிழரசு’ இதழ் சார்பில் இந்தத் தொகுப்பு நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்னோடித் திட்டங்களின் வெற்றியைப் பறைசாற்றும் கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உருவெடுத்த வரலாற்றை ஆவணப்படுத்தும் நோக்கில், துறை வாரியான சாதனைகள் மற்றும் வல்லுநர்களின் கருத்துக்களுடன் இச்சாதனை மலர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *