பாமக பெயர் மற்றும் சின்னம் தொடர்பான உரிமையியல் வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
March 13, 2026

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மகன் அன்புமணிக்கு எதிராகத் தொடர்ந்த கட்சி உரிமை தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் தன்னையும் இணைக்கக் கோரி கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி இந்த உத்தரவைப் பிறப்பித்தார். மேலும், இது தொடர்பாக ராமதாஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.