ஒரே ஒரு மாணவியின் கல்விக்காக இயங்கிய ரயில் நிலையம்
March 13, 2026

ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் உள்ள கையு-ஷிராடாகி ரயில் நிலையம், கானா ஹராடா என்ற மாணவியின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 2016 ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்டது. பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் நிலையத்தை மூட அதிகாரிகள் திட்டமிட்டனர், ஆனால் அந்த மாணவி பள்ளி செல்ல இந்த ரயில் மட்டுமே ஆதாரம் என்பதை அறிந்து முடிவை மாற்றினர்.
பள்ளி நேரத்திற்கு ஏற்ப ரயில்கள் அங்கு நின்று சென்றன. சரக்கு போக்குவரத்து முடங்கிய நிலையிலும், லாபத்தை கருதாமல் மாணவியின் படிப்பிற்காக ஜப்பான் ரயில்வே காட்டிய இந்த பொறுப்புணர்வு இன்றும் சமூக வலைதளங்களில் பலரது நெகிழ்ச்சியைப் பெற்று வருகிறது.