பயங்கரவாதம் தொடர்ந்தால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம்

பயங்கரவாதம் தொடர்ந்தால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானின் இரட்டை வேடத்தை இந்தியா கடுமையாக சாடியது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று குறிப்பிட்ட இந்திய தூதர் ஹரிஷ் பர்வதனேனி, ஏப்ரல் 2025-ல் பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டினார். சர்வதேச அரங்கில் பிளவுபடுத்தும் அரசியலை முன்னெடுக்கும் பாகிஸ்தானின் செயலை அவர் கடுமையாக விமர்சித்தார்.

பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முழுமையாக நிறுத்தும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் சூழலை விமர்சித்த தூதர், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தனது தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய எந்த எல்லைக்கும் செல்லும் என்று எச்சரித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *