உஜ்ஜைனியில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் காமுகனின் வெறியாட்டத்தால் பறிபோன உயிர்

உஜ்ஜைனியில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் காமுகனின் வெறியாட்டத்தால் பறிபோன உயிர்

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற அண்டை வீட்டுக்காரர் ரியாஸ் கான், சிறுமி சத்தமிட்டதால் அவரை மூட்டையில் கட்டி கொடூரமாக தாக்கியுள்ளார். தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்த சிறுமி விளையாடிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். தாக்குதலில் சுயநினைவை இழந்த சிறுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சிறுமி மாடியிலிருந்து விழுந்துவிட்டதாகக் கூறி தப்பிக்க முயன்ற ரதிலின் நாடகத்தை மருத்துவர்கள் முறியடித்தனர். சிறுமியின் உடலில் இருந்த காயங்கள் ஏதோ கனமான பொருளால் தாக்கப்பட்டவை என உறுதி செய்யப்பட்டது. தடையவியல் நிபுணர்களுடன் இணைந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *