திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு நற்செய்தி இனி ஆன்லைனில் கிடைக்கும் ஸ்ரீவாரி தங்க டாலர்கள்

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு நற்செய்தி இனி ஆன்லைனில் கிடைக்கும் ஸ்ரீவாரி தங்க டாலர்கள்

திருமலைக்கு நேரில் செல்லாமலேயே ஏழுமலையான் உருவம் பொறித்த தங்கம் மற்றும் வெள்ளி டாலர்களை இனி ஆன்லைன் மூலம் பக்தர்கள் தங்கள் இல்லம் தேடி வரவழைக்கலாம். இதற்கான அதிரடித் திட்டத்தைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. தபால் துறை மூலமாக முறையான காப்பீட்டு வசதியுடன் இவை பாதுகாப்பாக பக்தர்களின் வீடுகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.

தங்கம் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு சாதாரண மக்களுக்காக வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட டாலர்களை அறிமுகப்படுத்தவும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்தவுடன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான விற்பனை தொடங்கும். இது முதியவர்கள் மற்றும் வெளியூர் பக்தர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *