பல்லி விழுந்த மதிய உணவு விவகாரத்தில் ஊழியர்கள் 3 பேர் அதிரடி சஸ்பெண்ட்

பல்லி விழுந்த மதிய உணவு விவகாரத்தில் ஊழியர்கள் 3 பேர் அதிரடி சஸ்பெண்ட்

கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி கிடந்ததைக் கவனிக்காமல் பரிமாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த உணவைச் சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையடுத்து, அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்தச் சம்பவத்தில் அஜாக்கிரதையாகச் செயல்பட்ட சத்துணவு அமைப்பாளர் கவுசல்யா, சமையலர் மனோகரி மற்றும் உதவியாளர் ஜெயா கமலம் ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார். மாணவர்களுக்குத் தடையின்றி உணவு கிடைப்பதை உறுதி செய்ய மாற்று ஏற்பாடுகளும் உடனடியாகச் செய்யப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *