டெல்லியில் மீண்டும் தொடங்குகிறது ரைடு ஷேரிங் மற்றும் கார்பூலிங் சேவை மகிழ்ச்சியில் பொதுமக்கள்

டெல்லியில் மீண்டும் தொடங்குகிறது ரைடு ஷேரிங் மற்றும் கார்பூலிங் சேவை மகிழ்ச்சியில் பொதுமக்கள்

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ரைடு ஷேரிங் மற்றும் கார்பூலிங் வசதிகளை மீண்டும் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஓலா, உபெர் மற்றும் ரேபிடோ போன்ற நிறுவனங்களுடன் சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா ஆலோசனை நடத்தினார். அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்தச் சேவைகளை முழுமையாகச் செயல்பாட்டிற்கு கொண்டு வர போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக அலுவலகம் செல்லும் நேரங்களில் வாகன எண்ணிக்கையைக் குறைக்க இது ஒரு முக்கிய தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தனிநபர் மின்சார வாகனங்களை (EV) கூடுதல் கட்டணம் அல்லது அனுமதி இன்றி அக்ரிகேட்டர் தளங்களுடன் இணைக்க அமைச்சர் பரிந்துரைத்தார். பொதுப் போக்குவரத்து மற்றும் ஷட்டில் பேருந்து சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் கடைசி மைல் இணைப்பை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் பகிர்வு பயணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மாசற்ற டெல்லியை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் சிர்சா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *