குட்கா பழக்கத்தால் பாதியில் நின்ற திருமணம் மணமகனின் செயலால் அதிர்ச்சியடைந்த மணப்பெண்
December 31, 2025

உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் குட்கா மற்றும் போதை பழக்கத்தால் ஒரு திருமணம் பாதியிலேயே நின்று போனது. திருமண மேடைக்கு மணமகன் போதையில் வந்ததோடு, வாயில் குட்காவை மென்று கொண்டிருந்ததைக் கண்ட மணப்பெண் அவருடன் வாழ மறுத்து திருமணத்தை அதிரடியாக நிறுத்தினார். மணமகன் எவ்வளவோ சமாதானம் செய்தும் அந்தப் பெண் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
மணமகனின் இந்த அநாகரீகமான செயலால் அதிருப்தியடைந்த மணப்பெண் வீட்டார், திருமணத்தை ரத்து செய்தனர். பின்னர் இரு வீட்டாரும் பேசி தாங்கள் பரிமாறிக்கொண்ட சீர் வரிசைகளைத் திருப்பித் தர முடிவு செய்தனர். போதைப் பழக்கம் ஒருவரது வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் எவ்வாறு சீரழிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.