சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் தவிப்பு இனி இந்த செயலி மூலம் எளிதாக புக் செய்யலாம்

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் தவிப்பு இனி இந்த செயலி மூலம் எளிதாக புக் செய்யலாம்

ஈரான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, எல்பிஜி சிலிண்டர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் முன்பதிவுக்கான காத்திருப்பு காலம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, கருப்பு சந்தையில் ஒரு சிலிண்டரின் விலை 3,000 ரூபாயை எட்டியுள்ளது. மேலும், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வழக்கமான புக்கிங் எண் தற்காலிகமாக செயல்படாததால் நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தொலைபேசி எண் வேலை செய்யாத பட்சத்தில், பொதுமக்கள் ‘Indian Oil ONE’ செயலியை பதிவிறக்கம் செய்து தங்களது இணைக்கப்பட்ட மொபைல் எண் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். எரிவாயு தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும், தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த சிலிண்டர் விலையை உயர்த்தி அரசு நடவடிக்கை எடுத்து வருவது நுகர்வோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *