சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மத்திய அரசுக்கு ஆதரவாக முதல்வர் அறிக்கை
March 12, 2026

மேற்காசிய போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளதோடு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் விரிவான ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது. தட்டுப்பாட்டை சீர்செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அவர் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு போதிய எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக உறுதியளித்துள்ள நிலையில், பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என்று முதல்வர் கேட்டுக்கொண்டார். இந்த இக்கட்டான சர்வதேச சூழலை எதிர்கொள்ள மத்திய அரசின் முயற்சிகளுக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.