குடும்பத் தலைவர்களுக்கு ஏன் 1000 ரூபாய் வழங்கப்படுவதில்லை என்பது குறித்து அமைச்சர் காந்தி விளக்கம்

குடும்பத் தலைவர்களுக்கு ஏன் 1000 ரூபாய் வழங்கப்படுவதில்லை என்பது குறித்து அமைச்சர் காந்தி விளக்கம்

வேலூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் காந்தி, முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்கு திட்டங்களை வெகுவாகப் பாராட்டினார். ஒரு குடும்பத்தை நிர்வகிப்பதில் ஆண்களை விட பெண்களுக்கே அதிக பொறுப்புணர்வு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதனாலேயே மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் நேரடியாக பெண்களின் வங்கித் கணக்கில் செலுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஆண்களிடம் பணத்தைக் கொடுத்தால் அது முழுமையாக வீட்டிற்குச் சென்றடையாது என்று குறிப்பிட்ட அமைச்சர், பெண்களிடம் கொடுக்கும் போது அது குடும்ப முன்னேற்றத்திற்கே பயன்படும் என்றார். மேலும், தமிழகத்தை விளையாட்டுத் துறையில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றியதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளையும் அவர் புகழ்ந்து பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *