கோவையில் திறக்கப்பட்டது ஜிடி நாயுடு திருவுருவச் சிலை
March 10, 2026

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடுவை சிறப்பிக்கும் வகையில், கோவை வ.உ.சி மைதானத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அவரது திருவுருவச் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். அறிவியல் மற்றும் விவசாயத் துறையில் அவர் ஆற்றிய அரிய தொண்டினைப் போற்றும் விதமாக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஜி.டி. நாயுடுவின் குடும்பத்தினர் மற்றும் கோவை மாநகராட்சி உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இயந்திரவியல் துறையில் புரட்சி செய்த நாயுடுவின் சாதனைகளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.