ஏழைகளின் சொந்த வீட்டு கனவை நனவாக்கும் திராவிட மாடல் அரசு

தமிழ்நாட்டில் 2030-ஆம் ஆண்டிற்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்ட திராவிட மாடல் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் நிதியுதவியுடன் குடிசைகள் மாற்றப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 1,79,850 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆட்சியை விட கூடுதல் வீடுகளைக் கட்டி முடித்து தற்போதைய அரசு சாதனை படைத்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் நிரந்தர வீடுகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.19,694 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 4,29,394 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அத்துடன் 23.56 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு, ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற தத்துவம் நனவாக்கப்பட்டு வருகிறது.