கூட்டணி குறித்து தவெக மாவட்ட செயலாளர்களுடன் என் ஆனந்த் தீவிர ஆலோசனை

கூட்டணி குறித்து தவெக மாவட்ட செயலாளர்களுடன் என் ஆனந்த் தீவிர ஆலோசனை

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், தவெக பொதுச்செயலாளர் என் ஆனந்த் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 120 மாவட்ட செயலாளர்களில் சுமார் 90-க்கும் மேற்பட்டோர் வரும் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடவே விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், கட்சியின் தலைவர் விஜய் எடுக்கும் எந்த முடிவிற்கும் தங்களின் முழு ஆதரவை வழங்குவதாகவும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

இதற்கிடையில் கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிலையில், விஜய் நாளை டெல்லி செல்லவுள்ளார். தேசிய கட்சிகளின் அழுத்தம் மற்றும் கட்சியின் உள்நிலை சூழல்களைக் கருத்தில் கொண்டு, வரும் ஓரிரு நாட்களில் கூட்டணி குறித்த இறுதி முடிவை விஜய் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் வட்டாரத்தில் இந்த நகர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *