நம்பர் ஒன் ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா புறக்கணிப்பு பின்னணியில் பாகிஸ்தான் வம்சாவளி காரணமா
March 13, 2026

பிரிட்டனின் ‘தி ஹண்ட்ரட் லீக்’ ஏலத்தில் உலகின் நம்பர் ஒன் டி20 ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசாவை எந்த அணியும் ஏலம் எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்பாப்வே வீரரான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் புறக்கணிக்கப்பட்டாரா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த ஏலத்தில் அப்ரார் அகமது போன்ற ஒருசில பாகிஸ்தான் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், ஷதாப் கான் மற்றும் ஹாரிஸ் ரவுஃப் போன்ற நட்சத்திர வீரர்கள் அதீத கவனத்தைப் பெறவில்லை. ஐபிஎல் உரிமையாளர்களின் ஆதிக்கம் உள்ள அணிகள் இவர்களைத் தவிர்த்தது தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.