ஈரான் மற்றும் அமெரிக்கா போர் பதற்றத்தால் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டு மீன்பிடி தொழில் முடங்கும் அபாயம்

ஈரான் மற்றும் அமெரிக்கா போர் பதற்றத்தால் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டு மீன்பிடி தொழில் முடங்கும் அபாயம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தியா இறக்குமதி செய்யும் சமையல் எரிவாயு விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் கப்பல்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகுகள் சமையல் எரிவாயு இல்லாமல் கரைகளிலேயே முடங்கி கிடக்கின்றன.

இந்த எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சந்தைக்கு வரும் மீன்களின் வரத்து குறையக்கூடும், இது நேரடியாக மீன் விலையை பல மடங்கு உயர்த்தும் என அஞ்சப்படுகிறது. கோவா, சென்னை மற்றும் கொச்சி போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மற்றும் படகு உரிமையாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளனர். அரசு உடனடியாக தலையிடாவிட்டால் மீன் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் சூழல் உருவாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *