காரில் நடந்த கொடூரம்: ஐடி மேலாளரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிஇஓ, ஆதாரமாக சிக்கிய டேஷ்கேம்

காரில் நடந்த கொடூரம்: ஐடி மேலாளரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிஇஓ, ஆதாரமாக சிக்கிய டேஷ்கேம்

உதயப்பூரில் பெண் ஐடி மேலாளர் ஒருவர் தனது நிறுவனத்தின் சிஇஓ மற்றும் இரு ஊழியர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 20 அன்று இரவு விருந்து முடிந்து திரும்பும்போது, அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு காரிலேயே இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண்ணின் உடலில் பலத்த காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவரது ஆபரணங்கள் மற்றும் உடமைகளும் திருடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காரில் இருந்த டேஷ்கேம் பதிவுகள் குற்றவாளிகளின் உரையாடல்களை அப்படியே படம் பிடித்துக் காட்டியதால் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதன் அடிப்படையில் ஜித்தேஷ் சிசோடியா உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீதிமன்றம் அவர்களை நான்கு நாள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *