வெறிநாய் கடித்த ஆட்டு இறைச்சியை உண்ட 400 கிராம மக்கள் சத்தீஸ்கரில் பெரும் பரபரப்பு

வெறிநாய் கடித்த ஆட்டு இறைச்சியை உண்ட 400 கிராம மக்கள் சத்தீஸ்கரில் பெரும் பரபரப்பு

சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில் உள்ள சர்காவ் கிராமத்தில் வெறிநாய் கடித்த ஆட்டின் இறைச்சியை சுமார் 400 பேர் உண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 28-ம் தேதி நடைபெற்ற ஒரு மத வழிபாட்டின் போது பலியிடப்பட்ட 13 ஆடுகளில், ஒன்று ஏற்கனவே ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாயால் கடிக்கப்பட்டது என்பது பின்னர் தெரியவந்தது. இதனால் கிராம மக்களிடையே தொற்று பரவும் அச்சம் நிலவுகிறது.

இந்த விவகாரத்தில் கிராமத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த ஆடு பாதிக்கப்பட்டதை அறிந்தும் பலியிட பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தற்போது உயிருக்கு அஞ்சி மருத்துவ முகாம்களை அமைத்து, அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *