கருப்பு நிறம் என்பதால் மருமகளுக்கு டார்ச்சர் கூடுதல் வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு துரத்திய மாமியார்
December 17, 2025

ஆந்திராவின் வினுகொண்டாவில் கருப்பு நிறம் என்ற காரணத்திற்காக கோபிலட்சுமி என்ற இளம்பெண் அவரது கணவர் மற்றும் மாமியாரால் வீட்டை விட்டு துரத்தப்பட்டுள்ளார். திருமணத்தின் போது 25 பவுன் தங்கம் மற்றும் 12 லட்சம் ரூபாய் வரதட்சணையாக வழங்கப்பட்ட நிலையிலும், நிறத்தைக் காரணம் காட்டி கூடுதல் பணம் கேட்டு அவர் மீது கொடூரமான முறையில் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தொடர் கொடுமைகளை தாள முடியாத கோபிலட்சுமி, தனது கணவர் வீட்டின் முன்பே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கணவர் மற்றும் மாமியார் வீட்டை பூட்டிவிட்டு தப்பியோடிய நிலையில், போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான இந்த நிறவெறிப் பாகுபாடு சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.