மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தம்பியை கொன்று தோட்டத்தில் புதைத்த அண்ணன்
December 17, 2025

ஷிமோகா மாவட்டம் ஜேடிகேரே கிராமத்தில் கள்ளத்தொடர்பு காரணமாக உடன்பிறந்த தம்பியை அண்ணனே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தனது மனைவியுடன் முறையற்ற உறவில் இருந்த 28 வயது ராமச்சந்திராவை, அவரது அண்ணன் மால்தேஷ் திட்டமிட்டு தீர்த்துக்கட்டியுள்ளார்.
திருமணச் சடங்கு என்று பொய் கூறி தம்பியை தோட்டத்திற்கு அழைத்துச் சென்ற மால்தேஷ், அங்கு அவருக்கு மது கொடுத்து கழுத்தை நெரித்துக் கொன்று புதைத்துள்ளார். ஒன்றரை மாதமாக காணாமல் போனதாக கருதப்பட்ட ராமச்சந்திராவின் வழக்கை விசாரித்த போலீசார், செல்போன் சிக்னல் உதவியுடன் இந்த கொடூர கொலையை கண்டுபிடித்து அண்ணனை கைது செய்தனர்.