பர்தா அணிய மறுத்ததால் விபரீதம் மனைவி மற்றும் இரு மகள்களை கொன்று புதைத்த கொடூரம்
December 17, 2025

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லியில் பர்தா அணிய மறுத்த காரணத்திற்காக தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களை ஒரு நபர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளியான பாரூக், சடலங்களை யாருக்கும் தெரியாமல் வீட்டு செப்டிக் டேங்கில் புதைத்து மறைத்துள்ளார்.
சுமார் பத்து நாட்களாக அவர்கள் காணாமல் போன நிலையில், போலீசாரின் விசாரணையில் இந்த கொடூரக் கொலை வெளிச்சத்திற்கு வந்தது. குற்றவாளி தனது செயலை ஒப்புக்கொண்டதை அடுத்து, உடல்கள் மீட்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.